ஆர்யன் கான் ஜாமின் மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு அக்டோபர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மும்பை அடுத்த கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியதற்காக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஆர்யன் கான் தனக்கு ஜாமீன் வழங்க கோரி கடந்த வாரம் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் .
வியாழக்கிழமை இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் ஆர்யன் கான் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை கேட்ட நீதிபதி விவி பாட்டீல், அக்டோபர் 20-ஆம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார் .