Categories
அரசியல்

இவர்களால் விலைவாசி உயர்கிறது…. சட்டத்தின் முன் நிறுத்துங்க…. ஓபிஎஸ் வலியுறுத்தல்…!!!

தமிழகத்தில் மக்களுக்கு அன்றாடம் தேவையான பொருட்களை பதுக்கி, விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருப்பவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சில தினங்களாகவே மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள், கட்டுமான பொருட்களின் விலை ஆகியவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தற்போது விழாக்கால என்பதால் காய்கறிகளின் தேவை அதிகரிக்கும் என்பதால் அதிக அளவில் கிடங்குகளில் பதுக்கப்படுவதாகவும் இதன் மூலம் விலைவாசி உயர்வதாகவும் கூறப்படுகிறது. அதே போன்று சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே பொருட்களை பதுக்கி பற்றாக்குறையை ஏற்படுத்தி விலை அதிகரிப்புக்கு காரணமாக இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இதனால் அடித்தள மக்கள் சிறப்பாக வாழ முடியும். எனவே தமிழக முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |