மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகர் 200 கோடி மோசடி செய்த வழக்கில் பாலிவுட் நடிகை நோகா நோரா ஃபேடேகியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் புரமோட்டர் ஆன ஷிவிந்தர் சிங்கின் மனைவியிடமிருந்து ரூபாய் 200 கோடி ஏமாற்றிய வழக்கில் சுகாஷ் சந்திரசேகர் மற்றும் அவருடைய மனைவி லீனா பால் மீது குற்றம்சாட்டப்பட்டது. தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுகாஷ் சந்திரசேகர் உடன் தொடர்பில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அவரிடமும் மீதும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து பிரபல பாலிவுட் நடிகை நோராவும் இந்த வழக்கில் தொடர்பு உடையவர் என கூறி அமலாக்கத் துறையினர் நோராவிற்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனை தொடர்ந்து நேற்று நோராவிடம் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.