உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. இதற்கிடையே மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழிற்சாலை முழுவதும் தீக்கிரையான நிலையில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்த எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.