4 ஆயிரம் தூரத்திலுள்ள இலக்கினை சுடும் நாய் வடிவிலுள்ள ரோபோவினை அமெரிக்கா ராணுவ வர்த்தக கண்காட்சி வெளியிட்டுள்ளது.
4 ஆயிரம் தூரத்திலுள்ள இலக்கினை குறி தவறாது சுடும் நாய் வடிவிலுள்ள ரோபோவினை அமெரிக்கா ராணுவ வர்த்தக கண்காட்சி வெளியிட்டுள்ளது. இந்த ரோபோவை பிலடெல்பியாவை தளமாகக் கொண்ட கோஸ்ட் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆயுத உற்பத்தியாளர் SWORD இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் உருவாக்கியுள்ளது.
எந்த சூழ்நிலையிலும் பதுங்கி நடந்து செல்லும் இந்த ரோபோவின் மேல் பகுதியில் உள்ள க்ரீட்மூட் ஸ்னைப்பர் வகை துப்பாக்கியின் மூலம் தாக்குதல் நடத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ரோபோவின் விலை மற்றும் பராமரிப்பு செலவு குறித்து இன்னும் தகவல்கள் வெளியிடவில்லை.