ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 90ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தலைவர்கள் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளனர். மேலும் ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீர் உதம்பூர் பகுதியிலுள்ள அப்துல்கலாமின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.