Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அறுந்து கிடந்த மின்சார வயர்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தலையாமங்கலம் கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இவர் அ.ம.மு.க. தலையாமங்கலம் ஊராட்சி செயலாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயராமன் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலைகளை பார்த்து விட்டு திரும்பி வந்துள்ளார். அப்போது வயலில் மின்சார வயர் அறுந்து கிடந்துள்ளது. இதனைப் பார்க்காத ஜெயராமன் அந்த வயரை மிதித்ததும் மின்சாரம் தாக்கி ஜெயராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயராமனின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் இதுகுறித்து கூறுவதாவது, கஜா புயலின் போது அப்பகுதியில் மரங்கள் சாய்ந்ததில் மின்கம்பங்கள் பாதி சாய்ந்த நிலையில் உள்ளது. அதில் உள்ள மின் கம்பிகள் அறுந்து விழும் நிலையில் இருப்பதால் நாங்கள் பலமுறை ஒரத்தநாடு மின்சாரத் துறைக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் அதை சரி செய்யாமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடக்கிறது. இதற்கு மேல் இது போன்ற விபத்து நடக்காமல் இருப்பதற்கு மின்சாரத்துறை உடனடியாக கஜா புயலின் போது சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்திவிட்டு புது மின் கம்பம் நட்டு பொதுமக்களை பாதுகாக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |