Categories
தேசிய செய்திகள்

நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் பலி…. ஆந்திராவில் சோகம்….!!

காளகஸ்தி அருகேயுள்ள நீர்வீழ்ச்சியில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான சஞ்சய்குமார், தேவா, விஜய், காமேஷ் ரமேஷ் மற்றும் துளசிதரன் இவர்கள் 6 பேரும் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் நாகலாபுரம் அருகே உள்ள ஒரு நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளனர். ஆந்திராவில் தற்போது கன மழை கொட்டித் தீர்த்து வருவதால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்துள்ளது. இதனால் இவர்கள் நீர்வீழ்ச்சியில் குளிக்காமல் அருகே உள்ள சிறிய தண்ணீர் தேக்கத்தில் குறித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து குளித்துக்கொண்டிருக்கும் போது சஞ்சய்குமார் திடீரென தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவருடைய நண்பன் தேவா என்பவர் அவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.

இதனால் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதைப்பார்த்த  அவருடைய நண்பர்கள் கூச்சலிட்டு உள்ளனர். ஆனால் அப்பகுதியில் யாரும் இல்லாததால் தண்ணீரில் மூழ்கிய இருவரையும் காப்பாற்ற இயலவில்லை. இதுகுறித்து நாகலாபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் சஞ்சய்குமார், தேவா  ஆகிய இருவரின் உடலையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதுகுறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |