பரியேரும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தையும் தனி இடத்தையும் பிடித்துள்ள நடிகர் கதிர். நல்ல கதையும் கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதிர், தற்போது அறிமுக இயக்குநாரான குமரன் இயக்கத்தில் ஜடா என்னும் படத்தில் நடித்துள்ளார்.
ஆறுபேர் கொண்ட அணிகள் விளையாடும் கால்பந்தாட்ட போட்டிகளில் நடக்கும் கதைகளம் அதைச்சுற்றி நடக்கும் பிரச்னைகளைப் பற்றியும் கூறும் விதமாக ஜடா படம் உருவாகியுள்ளது.விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
படக்குழுவினரை மகிழ்ச்சியடையச் செய்யும் வகையில் ஜடா படத்தின் டீசரை இரண்டு மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர். மேலும், இப்படத்தின் இசையமைப்பாளர் சாம் CS இசையில் அனிருத் பாடிய பாடலை விரைவில் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.