முதல் முறையாக நெல்சன் பீஸ்ட் படத்தின் பாடல் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ஷைன் டாம் ஷாக்கோ, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
சமீபத்தில் பீஸ்ட் படக்குழு டெல்லி சென்றது. அங்கு ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் நெல்சன் பீஸ்ட் படம் குறித்து பேசியுள்ளார். அதில் இந்த படத்தில் மரண குத்து பாடல் இருக்கும். நீங்கள் இதுவரை பார்க்காத தளபதி என்ட்ரி இதில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.