Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மோசடி…. சிக்கிய சூதாட்ட நபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேடு பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் 87 லட்சம் ரூபாய் பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் பறிகொடுத்து விட்டதாக எழுதியுள்ளார். மேலும் அதில் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சைபர் க்ரைம் காவல்துறையினருக்கு விக்னேஷின் இழப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

அந்த விசாரணையில் சென்னையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தை நடத்தி கோடிக்கணக்கில் பணம் சுருட்டியது தெரியவந்துள்ளது. மேலும் அவர் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து சைபர் க்ரைம் காவல்துறையினர் ஹரிகிருஷ்ணனை உடனடியாக கைது செய்து, நடத்திய முதல்கட்ட விசாரணையில் சுமார் 30 பேரிடம் அவர் பணம் பிடுங்கியது தெரியவந்துள்ளது. மேலும் ஹரிகிருஷ்ணனிடமிருந்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், கார், கைப்பேசிகள் மற்றும் ரொக்கப்பணம் போன்றவற்றை  பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |