ஆஸ்திரேலியாவில் சிட்னி என்ற மிகப்பெரிய நகரில் கொரோனா குறித்த எந்த விதிகளும் சர்வதேச பயணிகளுக்கு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் இவ்வாறு தீர்மானித்தது குறித்து, பிரதமர் ஸ்காட் மோரிசன் தற்போது வரை எந்த கருத்தும் கூறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிட்னி நகரில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களை அனுமதிப்பது குறித்து பெடரல் நிர்வாகத்தின் அனுமதி தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நகருக்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், கொரோனா தொற்றுக்குப்பின், நாட்டில் சர்வதேச பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின், முதல்வரான, Dominic Perrottet கூறுகையில், சிட்னி நகர் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சர்வதேச பயணிகளை அனுமதிக்க தீர்மானித்திருக்கிறோம்.
அடுத்த மாதம் முதல் தேதியில், எப்போதிலிருந்து அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். எனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் இந்த வாய்ப்பை நன்றாக உபயோகித்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.