Categories
மாநில செய்திகள்

முதல்வருக்கு கடிதம் எழுதிய மாணவி…. உடனே போன் செய்த முதல்வர்…. எதற்கு தெரியுமா?…..!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9- 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. அதனைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1- 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

இதையடுத்து ஓசூரில் உள்ள டைட்டன் டவுன்ஷிபில் ரவிராஜன்- உதயகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரஜானா என்னும் மகன் உள்ளார். முன்னதாக இவர் பள்ளிகள் திறக்கும்படி ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி கோரிக்கை விடுத்திருந்தார். அக்கடிதத்தில் எழுதி இருந்த அவரது தொலைபேசி எண்ணிற்கு இன்று முதல்வர் ஸ்டாலின் தொடர்புகொண்டு மாணவியிடம் பேசியுள்ளார்.

அந்த மாணவியிடம்  பேசிய முதல்வர், நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் மாணவி பள்ளிக்கு செல்லலாம் கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்கள் கூறும் தனிமனித இடைவெளி மற்றும் முக கவசம் அணிதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றும்படி மாணவிக்கு அறிவுறுத்தி நன்றாகப் படிக்க வேண்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |