2021 ஆம் ஆண்டுக்கான உலக பட்டினி குறியீட்டில் இந்தியாவிற்கு 101 வது இடம் கிடைத்துள்ளது.
உலக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை ஆய்வு செய்து ஒரு பட்டியலை உருவாகின்றன. இதை அயர்லாந்தை சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற அமைப்பும், ஜெர்மனியை சேர்ந்த என்ற வெல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்பும் சேர்ந்து வெளியிடுகின்றது. இது ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது, சத்துணவு குறைபாடு, வயதுக்கு ஏற்ற உயிரிழப்புகள் ஆகியவற்றை கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு 107 நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 94வது இடம் கிடைத்திருந்தது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் 117 நாடுகளின் பட்டியலில் 101 ஆவது இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான், பங்காளதேஷ், நேபால் ஆகிய நாடுகளை விட இந்தியாவில் பட்டினியால் வாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதை குறிக்கின்றது. மேலும் இந்தியாவில் பட்டினியின் அளவு அபாய கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.