Categories
அரசியல்

தேசிய கீதத்தை ஏன் தமிழில் பாடக்கூடாது…?? கே.பாலகிருஷ்ணன் கேள்வி….!!

இந்திய தேசிய கீதத்தை தாய்மொழி தமிழில் ஏன் பாடக்கூடாது என சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை காமராஜர் அரங்கில் தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு என்கின்ற தலைப்பில் தென் மாநில மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்தார். மேலும் கேரள மாநிலத்தின் இடது ஜனநாயக ஒருங்கிணைப்பாளர் கர்நாடக மாநில சிபிஎம் செயலாளர், தெலுங்கானா சிபிஎம் மாநில செயலாளர், உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணன்,

Image result for cpim balakrishnan

மத்தியில் ஆட்சி புரிந்து கொண்டிருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சி பொருளாதாரத்தை ஒருபுறம் சீரழிப்பதோடு மட்டுமில்லாமல், மறுபுறம் மாநிலங்களில் இந்தி திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பு போன்றவற்றைக் கொண்டு வந்து அம்மாநிலங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், பாரதிய ஜனதாக் கட்சி ஹிந்தி திணிப்பை கையில் எடுத்தால் அதற்கு எதிராக தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு என்ற ஆயுதத்தை கையிலெடுத்து போராடும் என்று தெரிவித்தார். மேலும் இன்று தாய் மொழியைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஆகையால் மற்ற நாடுகளைப் போல் நாமும் ஏன் தேசிய கீதத்தை தாய்மொழியில் பாடக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |