டிசிஎஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணி செய்யும்படி அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் கடந்த ஆண்டு முதலே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஐடி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணி புரியும் படி அறிவித்திருந்தது. இன்போசிஸ், டிசிஎஸ், ஹெ.சி.எல் உள்ளிட்ட அனைத்து ஐடி நிறுவன ஊழியர்களும் வீட்டிலிருந்தே வேலை பார்த்து வந்தனர். கடந்த ஆண்டு தொடங்கிய பணி தற்போது வரை நீண்டு வருகின்றது. தற்போது கொரோனா தொடர்ந்து குறைந்து கொண்டு வருவதால் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணி புரியும் படி அறிவித்து வருகின்றன.
அதன்படி டிசிஎஸ் நிறுவனமும் நவம்பர் 15ஆம் தேதி முதல் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணி செய்ய வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளது. உலகம் முழுவதும் டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் மொத்தம் 5 லட்சம் பணியாளர்கள் மட்டுமே தற்போது அலுவலகத்திற்கு வந்து பணிபுரிகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து ஊழியர்களும் அலுவலகம் வந்து பணிபுரிவதற்கு ஏற்றவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.