சாலையில் விழுந்த மரத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு சாலை மாநகராட்சி மண்டல அலுவலகம் எதிரில் இருக்கும் சாலையில் பெரிய மரம் ஒன்று சாய்ந்து விழுந்து விட்டது. இதனால் விருகம்பாக்கம், கோடம்பாக்கம் வழியாக அண்ணா மேம்பாலம் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் சாய்ந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றி விட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.