செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமர்ஜோதி கார்டன் அருகாமையில் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி சாலையில் நடந்து சென்றவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் மகாராஜா என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இவர் மீது கொலை முயற்சி மற்றும் போன் பறிப்பு ஆகிய இரண்டு வழக்குகள் போடப்பட்டு இருக்கிறது.
இதனை அடுத்து பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வண்ணம் வழிப்பறியில் ஈடுபட்டதால் மகாராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க காவல்துறை கமிஷனர் வனிதா உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை அவரிடம் வழங்கியுள்ளனர். மேலும் இம்மாவட்டத்தில் இந்த வருடம் மட்டுமே 46 நபர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருக்கிறது.