லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பழனி டவுன் காவல்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பூங்கா ரோடு பகுதியில் சந்தேகத்தின்பேரில் நின்றுகொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் செல்வம் என்பதும், லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வத்தை கைது செய்து அவரிடம் இருந்த 3,500 ரூபாய் பணம் மற்றும் 50 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.