Categories
உலக செய்திகள்

“ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனித உரிமை மன்றத்தில் மீண்டும் இணைந்த அமெரிக்கா!”.. வெளியான தகவல்..!!

ஐக்கிய நாடுகளின் நிறுவனத்தின் மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்திருக்கிறது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியின் போது, சுமார் மூன்று வருடங்களுக்கு முன், ஐக்கிய நாடுகளுக்கான நிறுவனத்தின் மனித உரிமை மன்றத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது. மேலும் அமெரிக்கா, மனித உரிமை மன்றம், பாகுபாட்டுடன்  இயங்குவதாக குற்றம்சாட்டியது.

இந்நிலையில், தற்போது இம்மன்றம் 18 உறுப்பு நாடுகளை புதியதாக தேர்வு செய்திருக்கிறது. இதில் அமெரிக்காவும் இடம்பெற்றிருக்கிறது. இந்த 18 நாடுகளும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின்  பொது சபை கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |