Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விரைவில் 70% பேருக்கு தடுப்பூசி…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிரடி….!!!!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிய இருதய சிகிச்சை பிரிவ சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பால்வளத்துறை அமைச்சர் நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை வேலு, கருணாநிதி, நடிகர்கள் பிரபு மற்றும் விக்ரம் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரதுறை அமைச்சர், இந்த வாரம்  பண்டிகை வருவதால் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகம் நடத்தப்படாது என்றும்  அடுத்த முகாம் எப்போது நடத்தப்படும் என்று இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இதுவரை 67% நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் ஐ சி எம் ஆர் அறிவுரைப்படி தமிழகத்தில் 70% நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். மேலும் இரண்டாம் தவணை செலுத்தாத 20 லட்சம் நபர்களுக்கு அடுத்த முகாமில் செலுத்தப்படும். இதையடுத்து பண்டிகை காலம் வருவதால் அரசு ஏற்படுத்தி உள்ள தளர்வுகளை மக்கள் முறையான வழிகாட்டுதல் நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறார்களா என்று கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படுகிறது.

 

 

 

Categories

Tech |