கப்பலில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் பணமோசடி செய்தவர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடுதாழை மீனவர் கிராமத்தில் டெரெஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெபஸ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஜெபசும் இவரது நண்பர்களும் தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியில் வசிக்கும் சகாய பார்த்திபன் என்பவரை தொடர்பு கொண்டு கப்பலில் வேலைக்கு செல்வதற்காக கேட்டுள்ளனர். அதற்கு சகாய பார்த்திபன் கப்பலில் வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு பணம் கட்ட வேண்டும் எனவும் அவர்களிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜெபஸ் அவரது நண்பருடன் சேர்ந்து சகாய பார்த்திபனிடம் வங்கி கணக்கில் நெட் பேங்கிங் மூலம் ரூ.8 1\2 லட்சம் கட்டினார்.
ஆனால் சகாய பார்த்திபன் வேலை வாங்கிக் கொடுக்காமல் நீண்ட நாட்கள் கடத்தினார். இதனைத் தொடர்ந்து ஜெபசும் அவர்களது நண்பர்களும் கொடுத்த பணத்தை சகாய பார்த்திபனிடம் திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் சகாய பார்த்திபன் அதற்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து ஜெபஸ் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சகாய பார்த்திபனை வலைவீசி தேடி வருகின்றனர்.