Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொது இடங்களில் இப்படி செய்யாதீங்க…. 630 பேருக்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

பொதுயிடங்களில் குப்பை மற்றும் கட்டுமானம் கழிவுகளை கொட்டியவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை மாநகரினை சுத்தமாக வைத்துக்கொள்ளும் நோக்கில் பொதுயிடங்களில் குப்பைகளை போடுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் வாகனங்களிலிருந்து குப்பைகளை கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது இடங்களிலும், நீர்நிலைகளிலும் கட்டுமான கழிவுகளை கொட்டுபவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின்படி அதிகாரிகள் அபராதத்தினை விதிக்கின்றனர்.

அதன்படி கடந்த 11, 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் பொதுயிடங்களில் குப்பை கொட்டிய 507 பேருக்கு  அபராதம் விதிக்கப்பட்டது. ஆகவே அவர்களிடம் இருந்து மொத்தம் 3 லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதனையடுத்து பொது இடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டிய 123 பேருக்கு மொத்தம் 3 லட்சத்து 24 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. எனவே பொதுமக்கள் பொது இடங்களிலும், நீர்வழித் தடங்களிலும் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

Categories

Tech |