திருப்பதியில் புகழ்பெற்ற வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவு பெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டும் தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த பிரம்மோற்சவத்தில் அம்மாநில முதல்வர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து 11 ஆம் நாளான இன்று சங்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து இன்று இரவு 7 மணி அளவில் தங்க கொடி மரத்தில் இருந்து கருட கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறும்.