Categories
உலக செய்திகள்

கால்பந்து போட்டியில் கோல் அடித்து கலக்கிய அதிபர்.. இணையதளத்தில் வைரலாகும் வீடியோ..!!

பிரான்ஸில் மருத்துவமனை தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில் அதிபர் இமானுவேல் மக்ரோன் கோல் அடித்த வீடியோ இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பிரான்ஸ் மற்றும் பாரிஸ் மருத்துவமனையின் அறக்கட்டளைக்காக நிதி திரட்ட Poissy-ல் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. இதில் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உட்பட பல பிரபலங்கள் ஒரு அணியிலும், மருத்துவமனையின் முன் களப்பணியாளர்கள் மற்றொரு அணியும் விளையாடியுள்ளார்கள்.

அப்போது, அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், பெனால்டி கிக்கில் கோல் அடித்தார். அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டிக்காக சுமார் 3000 டிக்கெட்டுகள் விற்பனையானது. இதன் மூலம் கிடைத்த நிதியை மருத்துவமனை தொண்டு நிறுவனத்திற்கு அளித்துள்ளனர்.

Categories

Tech |