வருமானமில்லாததால் மனமுடைந்த காதல் தம்பதியினர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கிளாமரம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். ஹோட்டலில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதற்கு இரு வீட்டாரின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாகராஜ் மற்றும் தனலட்சுமி தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். தற்போது தனலட்சுமி 6 மாத கர்பிணியாக உள்ளார். இந்நிலையில் நாகராஜ் வேலை இழந்து வருமானமின்றி சாப்பாட்டிற்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த நாகராஜ் மற்றும் தனலட்சுமி வாழ்வில் விரக்தியடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த கமுதி இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் பிணமாக தொங்கிய தம்பதியினரின் உடல்களை மீட்டு உடற்கூராவிர்க்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.