Categories
தேசிய செய்திகள்

வீடியோ கால் மூலம் தாய் தந்தையுடன் பேசிய ஆரியன் கான்…. சிறையில் இரவு முழுவதும் தூக்கமின்றி இருந்ததாக தகவல்….!!!

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆரியன் கான் மூன்று நாட்களுக்கு முன்பு சிறை காவலர் முன்னிலையில் வீடியோகால் மூலம் தந்தை ஷாருக் கான் மற்றும் தாயாருடன் உரையாடியுள்ளார்.

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மீதான ஜாமீன் மனு விசாரணை நேற்று மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த போதைப்பொருள் விவகாரத்தில் சர்வதேச தொடர்புகளை கண்டுபிடிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியை நாடி உள்ளதாக அரசு தரப்பு வக்கீல் வாதாடியுள்ளார். மேலும் ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை ஆர்த்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கான் கடந்த வியாழக்கிழமை பொது சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஆரியன் கான் இரவு முழுவதும் உறங்க வில்லை அமைதியற்ற நிலையில்  காணப்பட்டார் என சிறைக்காவலர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து அவரை போலீசார் கண்காணித்து வருகின்றனர். கொரோனா நெறிமுறைகளின்படி சிறையிலுள்ள கைதிகளை பார்ப்பது தடை செய்யப்பட்டுள்ளதால் தற்போது சிறையில் உள்ள கைதிகள் குடும்பத்தினர் அல்லது வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ள சுமார் பதினோரு ஸ்மார்ட்போன்கள் சிறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு அழைப்பிற்கும் 10 நிமிடங்கள் என வாரம் ஒருமுறை அதிகபட்சமாக இரண்டு முறை பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆரியன் கான் சிறை அதிகாரிகள் முன்னிலையில் தனது தாய் தந்தையுடன் வீடியோ அழைப்பில் பேசியதாக தகவல்கள் வெளியாகின.

Categories

Tech |