அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு வங்காள விரிகுடா, தென்கிழக்கு அரபிக்கடல், மன்னார் வளைகுடா, லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 4550 கிலோ மீட்டர் வரை காற்றுவீசப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் ராமநாதபுரத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் காமாட்சி கணேசன் அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம், ஏர்வாடி, கீழக்கரை உள்ளிட்ட பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். எனவே மீனவர்கள் தங்களது விசைப்படகு மற்றும் நாட்டு படகுகளை பாதுகாப்புடன் கடற்கடையில் நிறுத்தி வைத்துள்ளனர்.