விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றியை கைப்பற்றி உள்ளது. ஆனால் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. இதனை அடுத்து திமுகவின் வெற்றி குறித்து இபிஎஸ்- ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தை திமுக தங்களுடைய கைப்பாவையாக மாற்றி விட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இவ்வாறு அவர்களின் அறிக்கையை பார்க்கும் பொழுது கடந்த காலங்களில் அதிமுக அப்படிதான் வெற்றி பெற்றதா? என்று கேள்வி எழுப்புகிறது.
அதிமுகவில் சரியான தலைமை கிடையாது. அதிமுக பாஜகவை சார்ந்து இயங்கும் வரையிலும் தோல்விதான் ஏற்படும். ஜெயலலிதா உயிரோடு இருந்த காலகட்டத்தில் ஆட்சி கட்டுகோப்பானது தற்போது கிடையாது. விஜய் மக்கள் இயக்கத்தினர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றியை வைத்து விஜய் அரசியல் வருகை குறித்த ஒத்திகையை பார்க்கமுடியாது. விஜய் அரசியலுக்கு வந்தால் அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கும் என்று பேசியுள்ளார்.