Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் …. சீனியர் வீரர்களுக்கு ஓய்வு ….வெளியான தகவல் …..!!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின்  இடைக்கால பயிற்சியாளராக  ராகுல் டிராவிட் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற 15-ஆம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் டி20 உலக கோப்பை முடிந்த பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டி20 போட்டி நவம்பர் 17 , 19 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இப்போட்டி ராஞ்சி ,ஜெய்ப்பூர் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் நடக்கிறது. இதைத்தொடர்ந்து நவம்பர் 25-29 தேதி முதல் டெஸ்ட் போட்டியும் டிசம்பர் 3-7 இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடக்கிறது.இதனிடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ  திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சீனியர் வீரர்களுக்கு பதிலாக ஐபில் தொடரில் அசத்தி வரும் ருதுராஜ் கெய்க்வாட், ஹர்‌ஷல் படேல், வெங்கடேஷ் அய்யர் ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது .இதனால் இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பாக  இந்திய ‘ஏ ‘அணி மற்றும் ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார் .இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு முழுநேர பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |