நடிகை மீனாவுடன் பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
செய்தி வாசிப்பாளராக ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் அனிதா சம்பத். இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் பிக்பாஸ் வீட்டில் அனிதா சில சர்ச்சைகளில் சிக்கி பின் வெளியேற்றப்பட்டார்.
இதன்பின் அனிதா பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று டைட்டிலை வென்றார். இந்நிலையில் அனிதா சம்பத் பிரபல நடிகை மீனாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.