நைஜீரியாவில் உள்ள லாகோஸ் நகரின் முக்கிய பகுதியாக இருப்பது பாலகோன் மார்க்கெட். இந்த மார்க்கெட்டில் விலை உயர்ந்த ஆடைகளையும், காலணிகளையும் விற்கும் ஐந்து மாடி கட்டடம் உள்ளது.
இந்த கட்டடத்தில் நேற்று காலை திடீரென தீ பற்றியது. இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
ஆனால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டதால், தீ வேகமாக பரவியது. இந்த தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை இன்னும் முடியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்தால் அந்த கட்டடத்தில் இருந்தவர்கள் தங்களது பொருட்களை கூடுமானவரை வெளியேற்றினர்.
மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றியோ, உயிரிழப்புகள் பற்றியோ காவல்துறை சார்பாக எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.