Categories
அரசியல்

தமிழகத்தில் 2 தீய சக்திகள் இருக்கு…. ஜெயக்குமார் யாரை சொல்கிறார் தெரியுமா…??

சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது அவருடைய ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் மீண்டும் அரசியலுக்கு வருவார் என்று திட்டவட்டமாக கூறி வந்த நிலையில் சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவதாகவும் கட்சியை கைப்பற்றுவேன் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் 16 ஆம் தேதி ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கோரியுள்ளார். இந்தநிலையில் சசிகலாவின் இந்த பயணமானது அதிமுக தலைமைக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா, ஜெயலலிதாவின் சமாதிக்கு செல்வது வீண் முயற்சி. அவரால் எந்தவித பிளவையும் அதிமுகவில் ஏற்படுத்த முடியாது. தமிழகத்தில் இரண்டு தீய சக்திகள் இருக்கிறது. அதில் ஒன்று திமுக, மற்றொன்று சசிகலா. அதிமுக தொண்டர்களின் ஒற்றுமையை எந்த தீய சக்தியாலும் அழிக்க முடியாது. சசிகலாவால் எந்தவித பாதிப்பும் அதிமுகவுக்கு ஏற்படாது. யார் எங்கே போனாலும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று கூறியுள்ளார்.

Categories

Tech |