Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… இரவு வாட்ஸ்அப் இயங்காது, ரூ.500 அபராதம்… திடீர் பரபரப்பு செய்தி….!!!!

இந்தியாவில் இரவு நேரங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என்ற தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. அதாவது இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை உங்கள் போனில் வாட்ஸ் அப் இயங்காது. இந்த தகவலை பெற்றவுடன் ஃபார்வர்ட் செய்யவில்லை என்றால் அக்கவுண்ட் டி-ஆக்டிவேட் செய்யப்படும். அதுமட்டுமல்லாமல் மீண்டும் கணக்கை இயக்க 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த தகவல் தவறானது எனவும் மத்திய அரசு இதுபோன்ற தகவலை வெளியிடவில்லை எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதனால் இது போன்ற செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். அக்டோபர் 4ஆம் தேதி வாட்ஸ்அப் முடங்கியதால், இது போன்ற போலி செய்தி பரவி வருவதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |