இந்தியாவில் நுரையீரல் நோயினால் ஆண்டுக்கு 2300 பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிக கொடிய நோய்களாக கருதப்படும் காசநோய், எய்ட்ஸ் மலேரியா உள்ளிட்ட நோய்களில் இறப்பவர்களை காட்டிலும், நுரையீரல் சார்ந்த நோய்கள் இறப்பவர்கள் விகிதம் அதிகமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதில், நுரையீரல் அடைப்பு, நுரையீரல் பாதிப்பு, மூச்சு திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் சார்ந்த நோய்களினால் ஆண்டுக்கு 2,300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டும் நுரையீரல் நோயால் ஒரு லட்சத்துக்கு 4000 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலானது தற்பொழுது இந்தியா மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.