கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அருகிலுள்ள கபூர் காஞ்சிரதாணியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அசுரப் என்பவரது வீட்டின் அருகில் மேடான பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த மணல் மேட்டில் வீதியில் சுற்றி திரிந்த நாய் மற்றும் அதன் ஆறு குட்டிகள் மண்ணில் புதைந்துள்ளது என்பதை யாரும் கவனிக்கவில்லை.
அதன்பிறகு தாய் நாயின் உடல் முழுவதும் மண்ணில் புதைந்து தலைப் பகுதி மட்டும் வெளியில் நீட்டிக் கொண்டிருந்த நிலையில் தன் குட்டிகளை காணவில்லை என்ற பாச போராட்டத்துடன் இடைவிடாமல் நீண்ட நேரம் அந்தத் தாய் நாய் அபாய குரலில் சத்தமிட்டது. இதையடுத்து தாய் நாயின் குரலைக் கேட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் திரண்டனர்.
இதையடுத்து மண்ணில் புதைந்து தவித்த தாய் நாயை காப்பாற்றினர். தாய் நாயுடன் ஆறு குட்டிகள் மண்ணில் புதைந்து இருப்பதால் தான் தாய் நாய் கூக்குரல் எழுப்பியுள்ளது என்று தெரியவந்தது. உடனே அப்பகுதி மக்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பின் மண்சரிவை சரிசெய்து 2 குட்டிகள் மட்டுமே உயிருடன் காப்பாற்றி மற்ற நான்கு குட்டிகள் மண்ணில் புதைந்து உயிர் இழந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களின் நெஞ்சில் நெகிழ்வை ஏற்படுத்தியது.