பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐயரை கோவிலுக்குள்ளையே பெண்கள் ஒன்று கூடி அடித்து உதைத்து நிர்வாணமாக்கிய வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பெண் பக்தர்களுக்கு சாமிக்கு தீபாராதனை காட்டும் ஐயர் ஒருவர் பாலியல் சீண்டல் அளித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அந்த ஐயர் கோவிலுக்குள் வந்த ஒரு சில பெண்களிடம் கோவிலுக்குள்ளேயே தவறாக நடக்கவும் முயற்சி செய்து உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் அவரை சரமாரியாக தாக்கி அடித்து உதைத்து நிர்வாணமாக்கினர்.இதனை கண்ட கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பிற அய்யர்கள் பெண்களை தடுக்க முயற்சித்த பொழுது அவர்களால் இயலவில்லை. இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததோடு மட்டுமல்லாமல் அவர் மீது போஸ்கொ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.