14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் லீக் போட்டிகள் முடிந்த நிலையில்,நடந்தா பிளே ஆப் சுற்றில் கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது .இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீச்சை நடத்துகின்றன.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது .இதில் தொடக்க வீரர்களாக ருத்துராஜ் – டூ பிளெசிஸ் ஜோடி களமிறங்கினர் .இருவரும் தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர் .இதில் ருதுராஜ் 32 ரன்னில் ஆட்டமிழக்க,அடுத்து வந்த ராபின் உத்தப்பா 31 ரன்னில் வெளியேறினார் . இதன்பிறகுன் களமிறங்கிய மொயின் அலி , டு ப்ளஸிசியுடன் ஜோடி சேர்ந்தார் .
இருவரும் அதிரடி ஆட்டத்தையை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .இதில் டூ பிளெசிஸ் 86 ரன்னும் , மொயின் அலி 37 ரன்னும் சேர்த்தனர். இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவிந்துள்ளது.இதில் கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 2 விக்கெட் கைப்பற்றினார்.இதன்பிறகு களமிறங்கியுள்ள கொல்கத்தா அணி 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடுகிறது .