பரோட்டா சாப்பிட்டு தூங்கிய கல்லூரி மாணவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியில் அரிய குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிபி சங்கமித்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் கடைக்கு சென்று பரோட்டா சாப்பிட்ட பிறகு சிபி சங்கமித்திரன் வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். இதனையடுத்து அதிகாலை 3 மணிக்கு மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட சிபிசங்கமித்திரனை அவரது பெற்றோர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் சங்கரமித்ரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பரோட்டா சாப்பிட்டதால் மாணவர் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.