ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 150 ரன்களை எடுத்தது. அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் அபார ஆட்டத்தால் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஸ்டீவ் ஸ்மித் நேற்றையப் போட்டியில் 51 பந்துகளில் 11 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 80 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் நேற்று பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது வஹாப் ரியாஸ் வீசிய பந்தை ஸ்மித், சேவாக் ஸ்டைலில் அப்பர் கட் அடிக்க முயன்றார்.
அப்போது அந்த பந்து ஸ்மித்தின் பேட்டின் மேல் விளிம்பில்பட்டு எகிறி பவுண்டரியை அடைந்தது.இந்தக் காணொலி ஆஸ்திரேலிய கிரிக்கெட் பக்கத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. அதனை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்துவருகின்றனர்.
This shot was pretty outrageous – Steve Smith seriously just makes it up as he goes! @alintaenergy | #AUSvPAK pic.twitter.com/aMu4hEbIZl
— cricket.com.au (@cricketcomau) November 5, 2019