பழனி முருகன் கோவிலில் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு அரசு சில தடைகள் விதித்துள்ளது. இதனை அடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் வியாபாரிகள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன் பிறகு அனைத்து நாட்களிலும் கோவில் மற்றும் கடைகள் இரவு 11 மணி வரை திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.