சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று புதிய திட்டங்களை வியாபாரத்தில் லாபங்களைப் பெருக்கிக் கொள்ள முடியும்.
எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். வீட்டை பராமரிக்கும் சூழல் ஏற்படும். பயணங்களால் நற்பலன்கள் ஏற்படும். பிரச்சனைகளை சமாளிக்கும் திறமை வெளிப்படும். காரியங்களில் தடைகள் ஏற்பட்டு சரியாகும். வெளியூர் அல்லது வெளிநாடு பயணங்கள் செல்ல நேரலாம். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். கலைத்துறையில் வெற்றி பெறுவீர்கள்.
சில விஷயங்களில் சண்டைகள் ஏற்படும். வீணான குழப்பங்கள் வரக்கூடும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். பிரச்சனைகள் பெரிய அளவில் இருக்காது. காதலில் உள்ளவர்கள் பக்குவமாக இருக்க வேண்டும். காதல் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை கூடும். கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணங்கள் ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், கண்டிப்பாக வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.