Categories
உலக செய்திகள்

கார் விற்பனையகத்தில் நுழைந்த பாம்பு…. வழுக்கி விழுந்த பெண்…. வைரலாகும் காணொளி காட்சிகள்….!!

கார் விற்பனையகத்தில் நுழைந்த பாம்பால் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் இணையத்தில் காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் உள்ள ஒரு கார் விற்பனையகத்தில் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. மேலும் அந்த விற்பனையகத்தின் தரையானது மிகவும் வழுவழுப்பாக்க இருந்ததால் பாம்பு அதில் சரசரவென்று சென்றுள்ளது. மேலும் ஊழியர்கள் அதை துரத்த பாம்போ அவர்களிடம் இருந்து தப்பியோட என ஒரே பரபரப்பாக இருந்தள்ளது.

அதிலும் Sompong Jaion என்னும் விற்பனையாளர் பாம்பை நாற்காலி கொண்டு துரத்த முயற்சித்துள்ளார். ஆனால் அதுவோ நாற்காலியில் சுற்றிக் கொண்டுள்ளது. இதனால் அவர் வேறு வழியில்லாமல்  பின்வாங்கியுள்ளார். மேலும் மற்றொரு பெண் துடைக்கும் மாப் ஸ்டிக் கொண்டு அதனை துரத்த முனைந்துள்ளார்.

ஆனால் பாம்பு அவரை நோக்கி திரும்ப உடனே அவர் வழுக்கி விழுந்துள்ளார். இதுமட்டுமின்றி பாம்பை ஆர்வமுடன் காணொளியாக எடுத்துக் கொண்டிருந்த பெண்ணையும் நோக்கி பாம்பு திரும்ப அவர் தப்பியோடும் பொழுது கீழே விழுந்துள்ளார். இதை கண்ட அனைவருக்கும் ஒருபக்கம் சிரிப்பு வந்தாலும் பாம்பு தாக்கி விடுமோ என்ற பய உணர்வும் மனதில் ஏற்பட்டுள்ளது.

இறுதியில் Sompong Jaion அந்த பாம்பை மாப் ஸ்டிக் உதவியுடன் வெளியே துரத்தியுள்ளார். மேலும் அதிர்ஷ்டவசமாக பாம்பு எவரையும் தாக்காமல் சென்றுள்ளது. இருப்பினும் கீழே விழுந்த பெண்ணுக்கு மட்டும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாம்பால் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் காணொளியாக இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |