பலமுறை உபயோகப்படுத்தக்கூடிய ராக்கெட் ஒன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் Deep Blue Aerospace என்ற தனியார் விண்வெளி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது ஒரு முறைக்கு பலமுறை உபயோகப்படுத்தக்கூடிய ராக்கெட் ஒன்றை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த ராக்கெட்டானது ஷான்ஜி மாகாணத்தில் இருக்கும் டோங்சுவான் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஏவுகணை தளத்தின் செங்குத்தான தரையிலிருந்து ஏவப்பட்டுள்ளது.
மேலும் இந்த ராக்கெட்டானது 100 மீட்டர் வரை உயரே சென்று மீண்டும் தரை நோக்கி திரும்பி உள்ளது.அதிலும் இது வருகின்ற 2025ல் அந்நிறுவனம் விண்ணிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நெபுலா-1 என்று பெயரிடப்பட்ட ராக்கெட் சோதனையின் ஒரு பகுதி எனக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த நெபுலா-1 ராக்கெட் ஆனது 2.25 விட்டம் உடையாதாகும்.