Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர்…. ஆதரவாளர்கள் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

வாலிபரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றதால் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பட்டி பகுதியில் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் காந்தி தனது காரில் கூட்ரோடு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது மணி மற்றும் அவரின் நண்பர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதும் நிலை ஏற்பட்டதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது பற்றி காந்தி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மணியை விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதன் காரணத்தால் அவரின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |