Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே தகராறு…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை கைது செய்யுமாறு பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டச்சியூர் பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியான லக்ஷ்மி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லஷ்மியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த லஷ்மியின் தந்தை முருகேசன், உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்துள்ளனர். அதன்பின் அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு சடலத்தை வாங்க மறுத்து லட்சுமி தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும், அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாகவும் கூறி இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிறகு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டிடம் முருகேசன் இச்சம்பவம் பற்றி மனு அளித்துள்ளார். அந்த மனுவில் எனது மகள் லட்சுமி 11 ஆண்டுகளுக்கு முன்பாக சம்பத் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஸ்ரீமதி மற்றும் மோனிஷா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து எனது மகளுக்கு ஆண்குழந்தை இல்லை எனக்கூறி சம்பத் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அப்போதிலிருந்து சம்பத் அடிக்கடி லட்சுமியிடம் சண்டை போட்டு வந்திருக்கிறார். அதற்குப் பிறகு கடந்த 4 நாட்களுக்கு முன்பாக உடல்நிலை சரியில்லை என தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர் அவரின் கணவர் சம்பத் லட்சுமியை வந்து அழைத்து சென்று இரண்டாவது மனைவியான மஞ்சுளா மற்றும் அவரது பெற்றோர்களுடன் இணைந்து கொலை செய்து அவரை தூக்கில் தொங்க விட்டுள்ளனர். இதில் லட்சுமியின் உடல் மற்றும் கண்ணங்களில் காயங்கள் இருப்பதினால் சம்பத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு லட்சுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். மேலும் இம்மாவட்ட சூப்பிரண்ட் சாந்தலிங்கம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |