Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இப்படியாக நடக்கணும்…. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்.‌‌…!!

மின்னல் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வெள்ளகுப்பம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஸ்வேதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை ஓட்டி வருவதற்காக சென்றுள்ளார். அப்போது இடியுடன் பலத்த கனமழை பெய்ததில் ஸ்வேதா அருகில் இருந்த புளிய மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றுள்ளார்.

அதன்பின் அவர் மீது மின்னல் தாக்கி உள்ளது. இதில் படுகாயமடைந்த ஸ்வேதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஸ்வேதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |