குடும்ப தகராறு காரணத்தினால் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்மனூர் பகுதியில் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கிருஷ்ணவேணி என்று மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அன்பின் பாபு குடிப்பழக்கத்தினால் வேலைக்கு செல்லாமல் இருந்ததாக தெரியவந்துள்ளது.
பின்னர் கிருஷ்ணவேணியிடம் மீண்டும் தகராறு செய்ததால் மன உளைச்சலில் அவர் தான் தொழில் நடந்தும் கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த பாபு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மனைவியின் சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்று பாபு மனைவி இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த கிருஷ்ணவேணி உறவினர்கள் விரைந்து வந்து இருவரது சடலத்தையும் யாருக்கும் தெரியாமல் வைத்து இருந்திருக்கின்றனர்.
இது பற்றி தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலை செய்த இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.