தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செய்து வருகிறது. இவ்வாறு திமுக ஆட்சியில் செய்த 100 நாள் சாதனை குறித்து திமுக சார்பாக பல்வேறு விளம்பரங்கள் செய்யப்பட்டு வந்தாலும், மறுபுறம் திமுக தொண்டர்கள் வித்தியாசமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தலையில் திமுக சின்னம், கட்சிக் கலரில் தொப்பி, இருசக்கர வாகனத்தின் அனைத்துப் பக்கங்களிலும் திமுக ஆட்சியின் நூறு நாள் சாதனை குறித்து விளக்க அறிவிப்புகளுடன் காங்கேயம் பஸ் நிறுத்தத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் திமுக தொண்டர் ஒருவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய பெயர் சு.வடிவேலு. இவர் திமுகவின் 100 நாள் சாதனை குறித்து கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிரசாரத்தை தொடங்கி தாம்பரம், திண்டிவனம், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி சென்று அங்கிருந்து திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் வழியாக காங்கேயம் வந்து பின்னர் திருப்பூருக்கு சென்றுள்ளார். சில வருடங்களாக அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்து வரும் இவர் தற்போது திமுகவின் சாதனைகள் குறித்து பிரச்சாரம் செய்கிறார். அதிமுகவை சரியான தலைமை இல்லாதவன் காரணமாக அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளதாக கூறியுள்ளார்.