அமெரிக்காவில் அமலில் இருந்த பயணத் தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக வெள்ளைமாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “மூன்று நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பதற்கான சான்றை வைத்திருப்பவர்கள் மற்றும் முழுமையான தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். இந்த விதியானது 26 ஐரோப்பியா நாடுகளுக்கும் பிரித்தானியா, பிரேசில், சீனா, இந்தியா, ஈரான், அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் பொருந்தும். அதிலும் 18 மாதங்களாக அமலில் இருந்த அனைத்து பயண தடைகளையும் அமெரிக்கா அகற்றியுள்ளது.
இதனை தொடர்ந்து வருகின்ற நவம்பர் 10ஆம் தேதி முதல் பிரித்தானியா மற்றும் ஐரோப்பியா நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தனது எல்லையை மீண்டும் திறக்கிறது. மேலும் பயணிகள் தாங்கள் எங்கிருந்து வருகின்றோம் என்ற விவரங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இயலாத குழந்தைகளின் நிலையை குறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் பயணம் செய்ய விரும்பும் குடும்பங்களுக்கு திட்டங்களை உருவாக்க கடினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் குழந்தைகளுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து எந்த தடுப்பூசிகள் செலுத்தியவர்களுக்கு அனுமதி உண்டு என்பது குறித்த விவரமும் சுருக்கமாக தான் கூறப்பட்டுள்ளது. அதிலும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பியா நாடுகள் முழுவதும் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை மக்கள் செலுத்தி உள்ளனர். ஆனால் அதனை அமெரிக்கா மருத்துவர்கள் இன்னும் முறையாக அங்கீகாரம் செய்யவில்லை. இதுகுறித்த தகவல்களை வரும் நவம்பர் 8ஆம் தேதிக்கு முன்பாக அதிகாரிகள் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.